டோக்கியோ ஒலிம்பிக்! தமிழக வீராங்கனைக்கு வெற்றி வாய்ப்பு! வாள்வீச்சில் பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி!

டோக்கியோ ஒலிம்பிக்! தமிழக வீராங்கனைக்கு வெற்றி வாய்ப்பு! வாள்வீச்சில் பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி!

Update: 2021-07-26 07:33 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பெண்களுக்கான தனிநபர் வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர். இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பவானி தேவி அடுத்த போட்டியில் உலகின் நம்பர் 3 பிரான்சின் மனோன் ப்ரூனெட்டை எதிர்கொள்கிறார்.

Tags:    

Similar News