மூக்குத்தியைத் தொடர்ந்து தக்காளி.. கொரோனா தடுப்பூசிக்கு அதிகரிக்கும் மவுசு !!
மூக்குத்தியைத் தொடர்ந்து தக்காளி.. கொரோனா தடுப்பூசிக்கு அதிகரிக்கும் மவுசு !!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி மற்றொரு புறம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் வேகமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை ஒருபக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
அதேநேரத்தில் பல இடங்களில் மக்களுக்கு தடுப்பூசி மீது உள்ள பயத்தால் ஊசி எடுத்துக் கொள்ள பலரும் தயங்கும் நிலை உள்ளது. இதனை போக்க மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வித்தியாசமான சலுகையை வழங்கியுள்ளது நகராட்சி நிர்வாகம் . அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் ஒரு கிலோ தக்காளில் இலவசம் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களுக்கு தருவதற்கு போதிய அளவில் தக்காளிகளை வியாபாரிகள் மாநகராட்சிக்கு தரவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், முன்னதாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நகை தயாரிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தனர். அதாவது அவர்கள் அமைத்துள்ள கொரோனா தடுப்பூசி மையத்துக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு மூக்குத்தியும், ஆண்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
newstm.in