உலகின் டாப் 10 செல்வந்தர்கள்: ஜெப் பெசாஸ் - எலான் மஸ்க் இடையே கடும் போட்டி.. அம்பானிக்கும் இடம் !!

உலகின் டாப் 10 செல்வந்தர்கள்: ஜெப் பெசாஸ் - எலான் மஸ்க் இடையே கடும் போட்டி.. அம்பானிக்கும் இடம் !!;

Update: 2021-04-07 07:25 GMT

போபர்ஸ் பத்திரிகை நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் டாப் 10 செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 35வது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் அமேசான் நிறுவர் ஜெப் பெசாஸ் மீண்டும் முதலிடத்தில் உள்ளார். ஜெப் பெசாஸ் மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

அவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்ளார். அவர் 151 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு போபர்ஸ் வெளியிட்ட பட்டியலில் மஸ்க் 31வது இடத்தில் இருந்தார். இந்நிலையில் அவரது நிறுவனம் திடீரென எழுச்சிபெற்றதால் 28 இடங்கள் முன்னேறி வந்துள்ளார் அவர்.

மூன்றாவது இடத்தில் LVMH தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 150 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளார். 

அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் பில் கேட்ஸ், ஐந்தாவது இடத்தில் மார்க் ஜூக்கர்பெர்கும் உள்ளனர். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் வாரன் பபெட் மற்றும் லாரி எலிசன், லாரி பேஜ், Sergey Brin மற்றும் முகேஷ் அம்பானி  ஆகியோர் உள்ளனர்.


newstm.in

Tags:    

Similar News