தொடரும் டார்ச்சர்.. அரசு ஊழியர்கள் அரை நிர்வாணப் போராட்டம் !!
தொடரும் டார்ச்சர்.. அரசு ஊழியர்கள் அரை நிர்வாணப் போராட்டம் !!
ஊழியர்களை மரியாதையின்றி பேசும் உயரதிகாரிகளை கண்டித்து ஏராளமானோர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், ஊழியர்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உயரதிகாரிகளின் போக்கை கண்டித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று தலைமை அலுவலகத்தில், தொழிலாளர்கள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பெரியசாமி கூறுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலத்தில் அதிகாரிகள் ஊழியர்களை மிகவும் மரியாதையின்றி நடத்துகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று காலத்தில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு, அந்த தகவல்களை கூறினாலும், உயரதிகாரிகள் ஏற்க மறுப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதோடுமட்டுமுல்லாமல், சில அதிகாரிகள் விடுப்பை அனுமதிக்காமல், 'ஆப்சென்ட்' போட்டு ஊதியப்பிடித்தம் செய்து விடுவேன், சஸ்பெண்ட் செய்து விடுவேன் என என மிரட்டுகின்றனர். மன அமைதியை கெடுத்தும், ஊழியர்கள் மத்தியில் தர்ம சங்கடத்தை உருவாக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அப்போது கோரிக்கை விடுத்தனர். ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in