ஒரு குடிகாரரால் ஒட்டுமொத்த சாலை விதிகளும் மாறிப்போச்சு.. காவல்துறை பகிர்ந்த வீடியோ !
ஒரு குடிகாரரால் ஒட்டுமொத்த சாலை விதிகளும் மாறிப்போச்சு.. காவல்துறை பகிர்ந்த வீடியோ !
குடிகாரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான் ஸ்டெடியாக தான் நிக்குறேன் என நினைத்துக்கொண்டு பண்ணும் அட்டகாசம் தாங்கல. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் கொட்டிக்கிறது. இந்த தற்போது குடித்துவிட்டு பைக்கில் செல்லும் ஒருவரின் பரிதாப, ஆபத்தான வீடியோவை போலீசாரே வெளியிட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் தங்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு நிதானம் இல்லாமல் சாலையில் பைக் ஓட்டும் நபரின் வீடியோ தான் அது. அவரால் சாலையில் நேராக பைக் ஓட்ட முடியமால் தட்டுதடுமாறி எதிரில் வருபவர்களை திசைமாற வைத்துள்ளார்.
சைபராபாத் காவல்துறையினர் இந்த வீடியோவை விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ளனர். இதுப்போன்று யாரும் குடித்துவிட்டு பைக் ஓட்ட வேண்டாம் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. போதையில் வண்டி ஓட்டும் அவர் ஹெல்மெட் இருந்தும் அதனை அவரது பைக் கண்ணாடியில் தொங்கவிட்டுள்ளார்.
அந்த நபர் மீண்டும் பைக்கில் ஏறி சாலையில் பைக்கை அங்கும் இங்குமாக ஓட்டி செல்கிறார். இதனால் அச்சாலையில் வந்த வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மறந்துவிட்டனர் என்றே கூறலாம். அந்த அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினார். கடைசியாக அவர் ஒரு கார் மீது மோதி மீண்டும் கீழே விழுகிறார்.
కృష్ణ గారి వీర డ్రైవింగ్ గాథ… మద్యం మత్తులో
— CYBERABAD TRAFFIC POLICE సైబరాబాద్ ట్రాఫిక్ పోలీస్ (@CYBTRAFFIC) July 9, 2021
ఇబ్రహీంపల్లి గేట్, చేవెళ్ల. 04.07.2021#RoadSafety #RoadSafetyCyberabad pic.twitter.com/ZDJvlTjOV2
இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பலரால் ஷேர் செய்யப்பட்டும், லைக்ஸ்களை அள்ளியும் வருகிறது. போலீசாரின் இந்த விழிப்புணர்வு வீடியோ காமெடியாக இருந்தாலும் குடித்துவிட்டு பைக் ஓட்ட வேண்டாம் என்பதை முக்கிய கருவாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
newstm.in