தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி போன்று, கர்நாடகாவில் பாரம்பரியமான போட்டி எருது பந்தயம். கர்நாடகாவில் அறுவடைக்கு பின்னர் எருது பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு ‘கம்பாலா’ என்று பெயரிட்டுள்ளனர். 

இதற்காக சேறும் சகதியுமாக தண்ணீர் நிரப்பிய இடத்தில் இரண்டு எருதுகளை பூட்டி வீரர் எல்லைக்கோட்டை எட்ட வேண்டும். இதில் குறைந்த நேரத்தில் சென்றவர்கள் தான் வெற்றிபெற்றவர்கள்.

இந்நிலையில், சித்தகட்டே அருகே உள்ள ஹொக்கடகோலி என்ற இடத்தில் எருது பந்தயம் நடத்தப்பட்டது. இதில் காளைகளுடன் வீரர்கள் மின்னல்வேகத்தில் பாய்ந்து சென்றனர்.  இந்நிகழ்ச்சியை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். 


newstm.in


 

Tags: