சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!!

சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!!

Update: 2022-01-24 12:47 GMT

சென்னையில் குடியரசு தினம் மற்றும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதால் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

72வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாளை மறுநாள் வரும் 26 ஆம் தேதி காமராஜர் சாலை காந்தி சிலை அருகே கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி காமராஜர் சாலையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நாட்களில் காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலை வழியாக பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, வி.கே. ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையும் வகையில் போக்குவரத்து மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பஸ், கார், பைக்: பிற வாகனங்கள், மாநகர பேருந்துகள், சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவைகள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை சந்திப்பு, நீல்கிரிஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம். 27 டி பஸ் மார்க்கம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் மாநகர பேருந்து தடம் எண் 27டி ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, அவை வி.எம்.தெரு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, ஜீ.பி.ரோடு, ராயப்பேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜீ.ஆர்.எச். ராயப்பேட்டை ஒன் பாயிண்ட், நடேசன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை, வழியாக அடையாறு சென்றடையலாம். வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை. 
 

Similar News