தாறுமாறு நம்பர் பிளேட்டுகளை ஒழிக்க அகிம்சை வழியை நாடும் போக்குவரத்து போலீஸ்..!
சட்டத்திற்கு புறம்பான வகையில் நம்பர் பிளேட்டுடன் வந்த கார் உரிமையாளருக்கு பாடம் புகட்டும் விதமாக போக்குவரத்து போலீசார் செய்த காரியம், அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
சட்டத்திற்கு புறம்பான வகையில் நம்பர் பிளேட்டுடன் வந்த கார் உரிமையாளருக்கு பாடம் புகட்டும் விதமாக போக்குவரத்து போலீசார் செய்த காரியம், அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் ஃபேன்சி வகையில் வாகன பதிவெண்களை பெறும் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காமல் நம்பர் பிளேட் ஓட்டுகின்றனர். அதாவது ஒரு காருக்கு ”0007 ”என்பது பதிவெண்ணாக இருந்தால், அதை வெறு ’7’ என்று மட்டும் குறிப்பிட்டு நம்பர் பிளேட் வைக்கின்றனர்.இப்படிச் செய்வது போக்குவரத்து விதிகளுக்கு புறம்பானது. மேலும், சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அபாரதம் விதிக்கவும் அல்லது வழக்குப் பதிவு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. எனினும், இதை பொருட்படுத்தாமல் பலரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் பிளேட்டுகளை வடிவமைத்து வாகனங்களில் பொருத்திக் கொள்கின்றனர். வாகனங்களின் பதிவெண்களுக்கு ஏற்றவாறு நம்பர் பிளேட்டை வடிவமைப்பது ஒரு வியாபாரமாகவே உள்ளது.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் வசூலிக்காமல். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.பஞ்சகட்ட பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, ஃபார்ச்சூனர் கார்வொன்று ஃபேன்சியான நம்பர் பிளேட்டுடன் வந்தது. அதை தடுத்து நிறுத்திய காவலர்கள், ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கவில்லை. மாறாக, அந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டை கழட்டிவிட்டு, போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்ட பதிவெண்களை வாகனத்தில் பொருத்தினர்.அத்துடன், விதிமுறைகளுக்கு இணக்கமான நம்பர் பிளேட்டை பொருத்துவதற்கு முன்பும், பின்பும் புகைப்படம் எடுத்து தங்களுடைய அலுவலக இணையதளத்தில் பதிவிட்டனர். இது அம்மாநிலம் முழுவதும் வைரலானது. இந்த சம்பவத்தை பார்க்கும் சமூக பயன்பாட்டாளர்கள் ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து பேசிய அந்நகர போக்குவரத்து முதன்மை அலுவலர் ஒருவர், வாகனங்களில் நம்பர் பிளேட்டை பொருத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இதற்கான பரப்புரையை ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
newstm.in