சோகம்: 18 மாத பச்சிளம் குழந்தைக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு !!

சோகம்: 18 மாத பச்சிளம் குழந்தைக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு !!

Update: 2021-05-27 17:22 GMT

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களை இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே குஜராத்தில் அதிக பாதிப்பு இருக்கிறது.

கொரோனா 2ஆவது அலையில் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகம் உள்ளது. முதலில் கருப்பு அடுத்தது வெள்ளை தற்போது மஞ்சள் என புதிது புதிதாக பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.கொரோனா சிகிச்சையின் போது அதிக அளவில் ஸ்டீராய்டு கொடுப்பதால் பூஞ்சை நோய் பாதிப்பு வருவதாக கூறப்படுகிறது.

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு, காய்ச்சல், முகத்தில் வீக்கம், வலி, பார்வை குறைபாடு, பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாகத் தெரிவது, மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது ஆகியவை கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்.கருப்பு பூஞ்சைகள் காற்றில் பரவி இருக்கும், அழுகிய காய்கறிகள், பழங்களில் இருக்கும். ஆரோக்கியமான நபர்களுக்கு பூஞ்சைகளால் பாதிப்பு கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த நோய் தாக்கும். 

இந்த புதிய வகை வைரஸ் காரணமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகார்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்றரை வயது குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழந்தைக்கு இணை நோய்கள் ஏதும் இல்லாத நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதித்து இருப்பது மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


 

Tags:    

Similar News