ஆந்திராவில் சோகம்… பாலம் இடிந்து விழுந்து 2 பேர் பலி..!

ஆந்திராவில் சோகம்… பாலம் இடிந்து விழுந்து 2 பேர் பலி..!

Update: 2021-07-07 12:11 GMT

ஆந்திரப் பிரதேசத்தில், கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அனகாபள்ளி பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.  இந்த சாலை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை, மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.  இதில், கீழே சென்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் லாரி ஒரு லாரி சிக்கிக் கொண்டன.



இதுபற்றி தகவல் அறிந்து துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரவானி தலைமையிலான போலீசார் மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். “இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி சரியாக எங்களுக்கு தெரியவில்லை.

இந்த பாலம் ஏன் இடிந்து விழுந்தது என்பது பற்றி நாங்கள் விசாரணை நடத்த இருக்கிறோம். இதுவரை 5 பேரை மீட்டு காப்பாற்றியுள்ளோம்.  அவர்கள் எங்களிடம், 2 பேர் சிக்கி உள்ளனர் என தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்” என, துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரவானி கூறினார்.

Tags:    

Similar News