கடலூரில் சோகம்.. கட்டடம் இடிந்து விழுந்து பிளஸ் 2 மாணவர் இருவர் பலி..!
கடலூரில் சோகம்.. கட்டடம் இடிந்து விழுந்து பிளஸ் 2 மாணவர் இருவர் பலி..!
கடலூர் அருகே, பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் அருகே எஸ்.புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமை வாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டடத்தில் யாரும் வசிக்காததால் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.
இன்று, இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார், புவனேஸ்வரன் உள்ளிட்ட சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டடம் இடிந்து விழுந்தது.
இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீரசேகர், சுதீஷ்குமார் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். புவனேஸ்வரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.