படப்பிடிப்பில் விபரீதம்.. நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு !!

படப்பிடிப்பில் விபரீதம்.. நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு !!

Update: 2021-10-22 17:00 GMT

படப்பிடிப்பில் பயன்படுத்தும் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் திரைப்படம் என்றால் நூற்றுக்கணக்கானோர் பணிபுரிவர். அதிலும் ஆக்சன் படம் என்றால் அதிக பணியாட்கள், தனியாக பிரமாண்ட செட் என நம்மை வியக்கவைக்கும் அளவுக்கு படப்பிடிப்பு நடக்கும்.

இந்த நிலையில், ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் ‘ரஸ்ட்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்றைய படப்பிடிப்பின் போது நடந்த விபரீததால் பெண் ஒளிப்பதிவாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

படத்தில் நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் குறி தவறி பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மீது பாய்ந்தது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

Tags:    

Similar News