தமிழகத்தில் சோகம்.. ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் லீக்- 8 பேர் கைது !!

தமிழகத்தில் சோகம்.. ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் லீக்- 8 பேர் கைது !!

Update: 2021-09-14 17:22 GMT

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தது. மாணவர்கள் மருத்துவர் என்ற கனவுடன் கஷ்டப்பட்டு படித்து இந்த தேர்வு எழுதுகின்றனர். ஆனால் வடமாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர், வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர்.

அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி, அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க, அதனை வாட்ஸ்அப் மூலம் பெற்ற ராம் சிங் தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார். 

இதற்காக ரூ. 35 லட்சம் பேரம் பேசப்பட்டு, தேர்வுமைய வளாகத்திலேயே 10 லட்ச ரூபாய் கைமாறியுள்ளது என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News