உ.பி.யில் சோகம்.. லாரி மீது பஸ் மோதல்: 12 பேர் பலி..!

உ.பி.யில் சோகம்.. லாரி மீது பஸ் மோதல்: 12 பேர் பலி..!

Update: 2021-10-08 18:13 GMT

உத்தரபிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி என்ற மாவட்டத்தில் உள்ள பாபுரி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஒன்று டெல்லியில் பக்ரியாச் என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

அப்போது பாபுரி என்ற கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வந்தபோது, சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார்.

அப்போது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த பயணிகளில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும், மீட்புப்படையினரும், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

Similar News