ஆம்புலன்சில் சிகிச்சைக்கு சென்றபாேது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சோகம் !!

ஆம்புலன்சில் சிகிச்சைக்கு சென்றபாேது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சோகம் !!

Update: 2021-11-27 20:00 GMT

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரை சேர்ந்த இளைஞர் பல்ஜித் (28). இவர் இன்று தனது வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அவரை மீட்க ஆம்புலன்ஸ் வந்தது. 

நிகழ்விடத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் பல்ஜித் ஆல்வார் நகரில் இருந்து ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்சில் காயமடைந்த பல்ஜித் அவரது சகோதரர் பக்சந்த் மற்றும் உறவினர்கள் உள்பட மொத்தம் 6 பேர் பயணம் செய்துள்ளனர்.   

ஆம்புலன்ஸ் துஷா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் வேகமாக சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி - ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் ஏற்கனவே காயம் அடைந்திருந்த பல்ஜித் அவரது சகோதரர் மற்றும் இரு உறவினர்கள் உள்பட 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மற்றொரு ஆம்புலன்சில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

Tags:    

Similar News