தாம்பரம் அருகே சோகம்.. நின்ற லாரி மீது டூ வீலர் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி..!
தாம்பரம் அருகே சோகம்.. நின்ற லாரி மீது டூ வீலர் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி..!
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் - பூந்தமல்லி செல்லும் புறவழிச்சாலையில், மண்ணிவாக்கம் புதுநகர் எதிரில் உள்ள டீக்கடை அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் டீ குடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, நாகல்கேணியை சேர்ந்த கோபிநாத் (37), அவரது மகன் கிரி (9), மகள் மோனிகா (7) ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த மூவருக்கும் தலை மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மூன்று பேரின் உடல்களையும் மீட்ட ஓட்டேரி போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் அவர்களின் இருப்பிடம் குறித்து விசாரித்ததில், அவர்கள் மூவரும் கோவளம் கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.