சூதாட்டத்தால் சோகம்.. ரூ.80,000 கடனை அடைக்க மகனை விற்ற தந்தை..!

சூதாட்டத்தால் சோகம்.. ரூ.80,000 கடனை அடைக்க மகனை விற்ற தந்தை..!

Update: 2022-01-25 05:30 GMT

திருச்சி காந்திபுரம் தேவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மனைவி கைருன்னிஷா. இவர்களுக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், 2 மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கூலித்தொழிலாளியான அப்துல் சலாம் சரிவர எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடனாக பணத்தைப் பெற்று சூதாடி வந்துள்ளார்.

அந்த வகையில், ஆரோக்கியராஜ் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதை ஈடுகட்ட, ஆரோக்கியராஜ் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லாததால் தற்போது பிறந்த குழந்தையைத் தர வேண்டும் என்று அப்துல் சலாமிடம் கூறியுள்ளார்.


இதையடுத்து அப்துல் சலாம், தனது மனைவி கைருன்னிஷாவிடம் பேசி, அவருடைய மனதை மாற்றி 2 மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை ஆரோக்கியராஜிடம் கொடுத்துள்ளார்.

திடீரென கைருன்னிஷா, தன்னுடைய குழந்தையை திருப்பித் தர வேண்டும் என்று அப்துல் சலாமிடம் கேட்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர் உறையூர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெற்ற மகனை 80 ஆயிரத்துக்கு விற்ற தந்தை அப்துல் சலாம்,  ஆரோக்கியராஜ் மற்றும் அவருடைய உறவினரான பொன்னர் மற்றும் சந்தான மூர்த்தி ஆகியோரை கைது செய்து மணப்பாறை சிறையில் அடைத்தனர்.

80 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க 2 மாத கைக்குழந்தையை தந்தையே விற்பனை செய்த சம்பவம், திருச்சி பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Similar News