மீண்டும் கொரோனா வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் !!

மீண்டும் கொரோனா வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் !!

Update: 2021-04-13 16:55 GMT

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா படுதீவிரமாக மாறியதால் மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பின. இதனால் தனியார் கட்டிடங்கள், ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டது. பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்தபின்னர் அனைத்தும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மருத்தவமனைகள் நிரம்புவதால் தற்போதும் ரயில்பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. நந்தூர்பார் பகுதியில் கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளின் தேவைக்காக, இந்திய ரயில்வேயிடம் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை மாவட்ட நிர்வாகம் கோரியுள்ளது.

அதன்படி இதுவரை 21 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளின் ஒவ்வொரு பெட்டியிலும் 16 நோயாளிகள் தங்கவைக்க வசதி உள்ளது. இதுபோல 90 பெட்டிகளை நந்தூர்பார் நிர்வாகம் கோரியுள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு, கேரளாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இங்கும் இந்த நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது. 
 

newstm.in

Tags:    

Similar News