நாய்களை கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறியும் பயிற்சி !!
நாய்களை கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறியும் பயிற்சி !!
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் ஒரு ஆண்டு ஆகியும் குறையவில்லை. இன்றும் கொரோனா உலக அளவில் முக்கிய செய்தியாக இருக்கிறது. தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட நோய் பாதிப்பு முற்றிலும் குறையவில்லை.
கொரோனா தொற்று ஆர்டிபிசிஆர் என்ற முறையில் கண்டறியப்படுகிறது. உமிழ்நீர் மற்றும் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து தொற்று உள்ளதா என கண்டறிகின்றனர்.இந்நிலையில் நாய்களை கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய இந்திய ராணுவம் முயற்சி செய்து வருகிறது. அதற்காக 'கேஸ்பர்' என்ற காக்கர் ஸ்பேனியல் வகை நாய்க்கும், ஜெயா, மணி என்ற இரு சிப்பிப்பாறை வகை நாய்களுக்கும் பயிற்சி அளித்தது.
#WATCH | Delhi: Indian Army dogs have been trained for real-time detection of COVID19. Cocker Spaniel named Casper seen participating in a live demonstration. Jaya and Mani, two dogs of indigenous breed Chippiparai, were also present. pic.twitter.com/18YdHX9Xfw
— ANI (@ANI) February 9, 2021
டெல்லியில் நடைபெற்ற பயிற்சியில் 3 நாய்களும், கொரோனா பாதித்தவர் உடைகளை சரியாக கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்தின. கொரோனா பாதித்தவரின் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் நாய்கள் கொரோனா பாதிப்பை கண்டுப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.இது, பரிசோதனை காலத்தைக் குறைக்கும் வழியே தவிர, முற்றிலும் துல்லியமானது என, கூற முடியாது.பயன்படுத்தப்படும் மாதிரிகள் (சிறுநீர் மற்றும் வியர்வை) வைரஸ் அழிக்கப்பட்ட மாதிரிகள் என்பதால் நாய்களுக்கு தொற்று ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது