பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளர்..!

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளர்..!

Update: 2021-10-04 06:00 GMT

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கியுள்ளது. முன்னதாக நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன், புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பிறகு நிகழ்ச்சி மேடைக்கு வந்த அவர், போட்டியாளர்களை அறிமுகம் செய்துவைக்க துவங்கினார். கானா பாடகியும் திரை பிரபலமுமான இசைவாணி முதல் போட்டியாளராக மேடைக்கு வந்தார்.

அவருக்கு பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் ராஜு இரண்டாவது போட்டியாளராக நிகழ்ச்சிக்குள் வந்தா. ஜெர்மனியைச் சேர்ந்த தமிழரான மதுமிதா மூன்றாவது போட்டியாளராக, யூ-ட்யூப் தொகுப்பாளரும் நடிகருமான அபிஷேக் நான்காவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

ஐந்தாவது போட்டியாளராக பிரபல மாடல் நமீதா மாரிமுத்து அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். இதன்மூலம் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல் திருநங்கை என்கிற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

 6வது போட்டியாளராக விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளரான பிரியங்கா ( Priyanka Deshpande ) உள்ளே செல்கிறார். 

7வது போட்டியாளராக அபிநய் உள்ளே நுழைகிறார்.

எட்டாவது போட்டியாளராக சீரியல் நடிகையான பாவனி வீட்டிற்கு செல்கிறார்.  

9வது போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு பிபி வீட்டிற்குள் நுழைந்தார்.

மலேசியா மாடலான பிக்பாஸ் வீட்டினுள் 10வது போட்டியாளராக செல்கிறார் நடியா சங்.

மலேசியா மாடலான பிக்பாஸ் வீட்டினுள் 11வது போட்டியாளராக செல்கிறார் வருண்.

பிக்பாஸ் வீட்டின் 12வது போட்டியாளராக நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளரான இமான் அண்ணாச்சி செல்கிறார். 

13வது போட்டியாளராக மாடல் சுருதி பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார். 

14வது போட்டியாளராக அக்‌ஷராவை கமல்ஹாசன் வரவேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது போட்டியாளராக மாஸா எண்ட்ரி கொடுத்தார் ஐக்கி பெர்ரி. மருத்துவம் படித்துவிட்டு ராப் இசையில் கலக்கும் ஐக்கி பெர்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக தாமரை செல்வி செல்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாணவனாக நடித்த சிபி பிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளராக வீட்டிற்குள் செல்கிறார். 

பிக்பாஸ் வீட்டின் 18வது போட்டியாளராக நிரூப் வீட்டினில் செல்கிறார்.

  

Tags:    

Similar News