போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஊதியம்.. நாளை மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை..!

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஊதியம்.. நாளை மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை..!

Update: 2021-12-28 15:15 GMT

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம் 2019 ஆகஸ்ட் மாதம் முடிந்தது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு பின், இரண்டு முறை பேச்சு நடத்தப்பட்டது.

இதையடுத்து, சட்டமன்றத் தேர்தல் வந்ததால் ஒப்பந்தம் நிறைவேறும் வரை மாதந்தோறும் 1,000 ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று கடந்த அதிமுக அரசு அறிவித்தது.

அதன்பின், திமுக ஆட்சி அமைந்த பிறகு, பேச்சு நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கூட்டணிக் கட்சி தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு, சென்னை குரோம்பேட்டை பணிமனையில் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச 66 தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒருவர் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News