அமீரகம் செல்பவரா நீங்கள் ? அப்போ கொரோனா டெஸ்ட் கட்டாயம்!

அமீரகம் செல்பவரா நீங்கள் ? அப்போ கொரோனா டெஸ்ட் கட்டாயம்!

Update: 2021-02-19 13:14 GMT

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு  எதிராக போராடி வரும் வேளையில் அந்தந்த நாடுகளில் பரவலுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் இருந்து துபாய்க்கு அமீரகத்துக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும். இந்த பரிசோதனை விமான பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் 72 மணி நேரம் முன்னதாக செய்ய வேண்டும்.

தற்போது துபாய் சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி  துபாய் நகருக்கு இந்தியாவில் இருந்து வருபவர்கள் கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் கியூ.ஆர். குறியீடு இருக்க வேண்டும். மேலும் இந்த பரிசோதனை முடிவுகளில் பரிசோதனை மாதிரி கொடுக்கப்பட்ட நேரம் அனைத்தும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த பரிசோதனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி பெற்ற ஆய்வகங்களில் மட்டுமே செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த கொரோனா பரிசோதனை 12 வயதுக்கு குறைவானவர்களுக்கும், உடலில் குறிப்பிட்ட பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையில்லை. இருந்தாலும் மற்ற  எமிரேட்ஸ் மற்றும் பிளை துபாய் விமான நிறுவனங்கள் இது குறித்து இதுவரை அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

Tags:    

Similar News