ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி.. மாவட்டம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு..!

ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி.. மாவட்டம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு..!

Update: 2021-12-09 18:39 GMT

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நீலகிரி மாவட்டத்தில்  நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உலக நாடுகளின் தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,  நீலகிரி மாவட்டத்தில்  நாளை (10-ம் தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படுகின்றன.

இதனால், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News