தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரும் த்ரிஷாவின் ‘பரமபதம்’!

தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரும் த்ரிஷாவின் ‘பரமபதம்’!

Update: 2021-04-05 19:36 GMT

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த முண்ணனி நடிகைகளில் த்ரிஷா முக்கியமானவர். சமீப காலமாக இந்தியா முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால் பல படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் சூர்யாவின் சூரரை போற்று, ஜெயம் ரவியின் பூமி,விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், மாதவனின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகிய படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

இதுபோல் த்ரிஷா நடிப்பில் வெளியாக தயார் நிலையில் இருக்கும் பரமபதம் படத்தையும் ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2020 பிப்ரவரி மாதமே தியேட்டர்களில் பரம பதம் விளையாட்டு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு, கொரோனா காரணமாக படம் ரிலீசாகாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் ஹாட் ஸ்டார், ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலையால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்திருப்பதாகவும், இதனால் படத்தை ஓ.டி.டி தளத்துக்கு கொண்டு வருவதாகவும் தயாரிப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Full View


 

Tags:    

Similar News