மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி... அதிரடி காட்டிய தாசில்தார்..!
மாற்றுத்திறனாளி தீ குளிக்க முயற்சி... அதிரடி காட்டிய தாசில்தார்..!
தூத்துக்குடி அருகே மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா பசுமை வீடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து கோவில்பட்டி தாசில்தார் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவர் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்க வேண்டி கடந்த 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை இவருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படாததால் மனமுடைந்த இவர் நேற்றைய தினம் கோவில்பட்டி தாசில்தார் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
newstm.in