மாணவியின் உயிரை பறித்த கல்விக் கட்டணம்.. விசாரணையில் பகீர் தகவல் !!
மாணவியின் உயிரை பறித்த கல்விக் கட்டணம்.. விசாரணையில் பகீர் தகவல் !!
கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் பென்சி (19). தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் டிப்ளமோ 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார் பென்சி. இவர் நேற்று இரவு வழக்கம் போல் மாடியில் உள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றார். எப்போதும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் வழக்கம் கொண்ட பென்சி பொழுது விடிந்து நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் அவரது தாயார் பென்சியை எழுப்ப சென்றார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது பென்சி தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறினர். அப்பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கினர்.
தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பென்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, முதற்கட்ட விசாரணையில், மாணவி பென்சி கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, தனியார் இன்ஸ்டிடியூட்டில் கல்வி கட்டணமாக ரூ.30 ஆயிரம் உடனடியாக கட்ட வேண்டும் என கூறி உள்ளனர். ஆனால் தன்னால் உடனடியாக பணம் கட்ட முடியாத நிலை இருப்பதாக பென்சி கூறி வருத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துதக்கொண்டுள்ளார். இதனிடையே, அவரது தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
newstm.in