வீடு புகுந்த திருடர்களை காட்டிக் கொடுத்த டி.வி!!
வீடு புகுந்த திருடர்களை காட்டிக் கொடுத்த டி.வி!!
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் இவரது வீட்டின் மாடியில் உள்ள வீட்டில் கவியரசன், குமார் ஆகிய இரண்டு பேர் வாடகைக்குத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மர்ம நபர்கள் இரண்டு பேர் கோபிநாத்தின் வீட்டுக் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் கதவு திறக்க முடியாததால், பக்கத்து வீட்டில் உள்ள செல்வராஜ் வீட்டிற்குள் நுழைந்து ரூ.2 ஆயிரம் பணத்தை திருடினர்.
பின்னர், கவியரசன் வீட்டிற்குள் நுழைந்து ரூ.1500 திருடியபோது வீட்டிலிருந்த டிவி கீழே விழுந்து உடைந்தது. இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த குமார் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது, கவியரசன் வீட்டின் வெளியே இரண்டு நபர்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களைப் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து பிடிபட்ட ஒருவரை அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் ஆந்திராவைச் சேர்ந்த அப்துல்மாலிக் என்று தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் தப்பிச் சென்ற நபரைத் தேடிவருகின்றனர்.
newstm.in