கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு 15 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 110 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. சில நாட்களாக பாதிப்பு குறைந்தாலும் தினசரி பாதிப்பு சுமார் 4 லட்சம் என்ற அளவில் ஏற்பட்டு வரகிறது. மேலும்  நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. 

இதனிடையே, கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன. அந்தவகையில் கொரோனா நிவாரண நிதியாக ட்விட்டர் நிறுவனம் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 110 கோடி ஆகும். 

இந்த தொகை 'கேர்'(CARE), 'எய்டு இந்தியா'(Aid India), 'சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா'(Sewa International USA) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முறையே 10 மில்லியன் டாலர்(73.47 கோடி ரூபாய்), 2.5 மில்லியன் டாலர்(18.36 கோடி ரூபாய்), 2.5 மில்லியன் டாலர்(18.36 கோடி ரூபாய்) என மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக் தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


newstm.in

 
 

Tags: