ஆபாச படங்களின் சிடி விற்பனை செய்த இருவர் கைது!
ஆபாச படங்களின் சிடி விற்பனை செய்த இருவர் கைது!
இணையத்தில் ஆபாச படம் பார்த்தால் கைது செய்யப்படுவர் என்ற நடவடிக்கையை பயன்படுத்தி, கமுதி அருகே குழந்தைகள் தொடர்பான ஆபாச சிடி-க்களை விற்பனை செய்த இரண்டு பேர் சிக்கினர்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இணையத்தில் சிறார் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம், பதிவேற்றம் செய்து குற்றம் என கூறி பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபாச படம் போர்ப்போர், தங்கள் செல்போனில் பார்ப்பதை விட்டுவிட்டு மீண்டும் சிடியில் பார்க்கும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளனர்.
அதாவது, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மரக்குளத்தை சேர்ந்த பொன்இருள் என்பவர் கமுதி பேருந்து நிலையத்தில் சிடி விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை விற்பனை செய்ததோடு அந்தப் படங்களை செல்போன்களிலும் பதிவேற்றம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கமுதி காவல் நிலைய போலீசார், அந்தக் கடையை சோதனை செய்தனர்.
அப்போது மடிக்கணினியை ஆய்வு செய்ததில் குழந்தைகள் தொடர்பான ஏராளமான ஆபாசப் படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் பொன் இருள் மற்றும் ஊழியர் வழிவிட்டான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
newstm.in