விஷவாயு தாக்கி இருவர் பலி.. தொடரும் இந்த கொடூரத்துக்கு எப்போது தான் தீர்வு ?
விஷவாயு தாக்கி இருவர் பலி.. தொடரும் இந்த கொடூரத்துக்கு எப்போது தான் தீர்வு ?
இந்த கொடூரம் இன்னுமா தொடர்கிறது என அதிர்ச்சியுடன் கேட்கும் வகையில், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பி.டி.சி கோட்ரஸ் குடியிருப்பில் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ராஜேஷ் (35), ஏழுமலை (35) ஆகிய இருவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரும் நீண்ட நேரமாக பதில் அளிக்காததால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் மணிமங்கலம் போலீசார்க்கும் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் கழிவுநீர் தொட்டியில் இறங்கி பார்த்தப்போது இருவரும் உயிரிழந்து கிடந்தது உறுதியாது.
இதனையடுத்து உயிரிழந்து கிடந்த இருவரின் உடலையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விசவாயு தாக்கி இருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in