பாத் டப்பில் ஆடையின்றி மிரட்டல்.. பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

பாத் டப்பில் ஆடையின்றி மிரட்டல்.. பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Update: 2021-08-03 19:20 GMT

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் மிரட்டலான முதல்பார்வை (First Look) வெளியானது.

கடந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று பிசாசு 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின் 2020 டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கினார். நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை முதல்பார்வை இன்று வெளியானது. ஹாரர் படமான இந்த படத்தில் ஏற்கனவே, ஆண்ட்ரியா ஒரு காட்சியில் ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என கூறப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ற போல் இந்த போமுதல்பார்வையும் ஸ்டரும் வெளியாகியுள்ளது.

பெண் ஒருவர், துளியும் உடலில் ஆடை இன்றி... பாத் டப்பில் படுத்திருப்பது போலவும், அவரது கால்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. கையில் சிகரெட் வைத்துள்ளார். திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகியுள்ளது ஃபர்ஸ்ட் லுக்.  

 பிசாசு முதல் பாகம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


newstm.in

Tags:    

Similar News