மறந்துடாதீங்க! இன்று முதல் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு துவக்கம்!
மறந்துடாதீங்க! இன்று முதல் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு துவக்கம்!
இந்தியாவில் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதை அடுத்து மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி
1.அனைத்து சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள்.
2.60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 60 வயதை அடைய இருப்பவர்கள்.
3.45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 45 வயதை அடைய இருப்பவர்கள்.
4.இணை நோய் இருப்பவர்கள்
இதய நோய் , உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ரத்தப் புற்று நோய் உள்ளவர்கள், நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் உள்ளவர்கள்
புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள், ஹெச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள், எலும்பு மஜ்ஜை பாதிப்பு உள்ளவர்கள்,தசை வலுவிழப்பு, மாற்றுத் திறனாளிகள், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், மூச்சுப்பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் ஆகியோர் இணை நோய் உள்ளவர்களாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.