#Union Budget - 2020 முக்கிய அம்சங்கள்
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் இன்று காலை சரியாக 11 மணிக்கு கூடியது. மக்களவைக் கூடியதும், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையை தொடங்கினார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் இன்று காலை சரியாக 11 மணிக்கு கூடியது.
மக்களவைக் கூடியதும், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையை தொடங்கினார்.
- ஜி.எஸ்.டியால் சராசரியாக மாத குடும்ப செலவினங்களில் 4 சதவீதம் வரை மிச்சப்படுகிறது
- விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதே அரசின் இலக்கு
- விவசாய சந்தைகள் நவீனமாக்கப்படும்
- Apr 01 முதல் வரி சீரமைப்பு செயல்படுத்தப்படும்
- 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.
- தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.
- பால் பழங்கள் காய்கறிகள் கொண்டு செல்ல தனி ரயில்
- விவசாயிகளுக்கு 15லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
- 2025 ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு
-
தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி
-
விரைவில் புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அமலுக்கு வரும்.
-
கல்வித்துறைக்கு 99,300 கோடி நிதி ஒதுக்கீடு
-
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
-
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
-
கல்வித்துறைக்கு 99,300 கோடி நிதி ஒதுக்கீடு
-
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
-
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
-
சென்னை பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம்
-
பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒரு வருட இன்டர்ன்ஷிப் பயிற்சி
-
2024க்குள் 100 மேலும் புதிய விமான நிலையங்கள்
-
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ஒதுக்கீடு
-
குழாய் வழியே எரிவாய்வு எடுத்து செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
-
பழங்குடியினர் நலனுக்காக 53000 கோடி ஒதுக்கீடு
-
பெண்களுக்கான திட்டங்களுக்கு 28,600 கோடி ஒதுக்கீடு
-
ஆதிச்சநல்லூரில்அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
-
பழங்குடியின அருங்காட்சியகம் ராஞ்சியில் அமைக்கப்படும்
-
நாடு முழுவதும் 4 அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்
newstm.in