மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளை கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் மத்திய உள்துறை இணை அமைச்சரான அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் உயிரிழப்பு 8ஆக அதிகரித்துள்ளது. 

லக்கிம்பூர் கேரியில் உள்ள டிகுனியாவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க வந்த உத்தர பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரில் சென்றுகொண்டிருந்தார். அப்பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், ஆஷிஷ் மிஸ்ராவின் காரை மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ் சிறிதும் மனிதாபிமானமில்லாமல் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றியுள்ளார். இதனால் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து கடுமையான கோபத்துக்கு ஆளான விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் 3 கார்களை தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிகுனியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.  விவசாயிகள் மீது தாக்குதலை கையாண்டதை கண்டித்து உத்தர பிரதேசத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனிடையே, விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  


newstm.in

Tags: