யூனிவர்சல் பாஸ்-ன்னா மாஸ் தான்.. சிக்ஸர் பறக்கவிட்டு எட்டமுடியாத சாதனை படைத்த கிறிஸ் கெயில்!!
யூனிவர்சல் பாஸ்-ன்னா மாஸ் தான்.. சிக்ஸர் பறக்கவிட்டு எட்டமுடியாத சாதனை படைத்த கிறிஸ் கெயில்!!
பிரபல வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இன்டீஸ் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி முதல் போட்டியில்ல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் மூன்றாவத விக்கெட்டாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் களமிறங்கினார்.
கிறிஸ் கெய்ல் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினார். ஆனால் சில பந்துகளை எதிர்கொண்ட பின்னர் மிரட்டத் தொடங்கினார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 8-வது ஓவரில் மிட் விக்கெட் திசைக்கு மேல் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். ஐபிஎல் வரலாற்றில் இது அவரது 350ஆவது சிக்ஸரை பதிவானது. இப்போட்டியில் கிறிஸ் கெய்ல் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 133 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 351 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். இதில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டும் 239 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையும் கெய்ல் வசம் தான் உள்ளது. 2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 17 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஏழு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய கெயில், 23 சிக்ஸர்களுடன் 288 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் கெயில் இதுவரை 351 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள டி வில்லியர்ஸ் 237 சிக்ஸர்களும் 3ஆவது இடத்தில் உள்ள தோனி 216 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள்.
newstm.in