உண்மை அடிப்படையில் ‘ஊர் குருவி’: விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் கவின் கதாநாயகன்..!
உண்மை அடிப்படையில் ‘ஊர் குருவி’: விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் கவின் கதாநாயகன்..!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கவினுக்கு ரசிகர்கள் பலம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி எந்த செய்திகள் வந்தாலும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கவினின் புதிய பட அறிவிப்பு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிக்கும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். ‘ஊர் குருவி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அருண் இயக்கவிருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை இயக்கும் அருண், விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.