இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும்- அமெரிக்க மருத்துவ நிபுணர் எச்சரிக்கை !!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும்- அமெரிக்க மருத்துவ நிபுணர் எச்சரிக்கை !!
இந்தியாவில் கொரோனா குறைந்து வந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், நெடு நாட்கள் அது நீட்டிக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் வகை கொரோனா இந்தியாவிலும் பரவியது. அதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று பாதிப்பும் மிகவேகமாக அதிகரித்து மிரட்டி வருகிறது.
குறிப்பாக, டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவன தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து புதிய ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியாவில் ஒமைக்ரான் அலை தற்போது தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு டெல்டா வைரஸ் அலையின் தாக்கத்தை விட இதில் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள். ஒமைன்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அடுத்த மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை உயரக்கூடும்.
ஒமைன்ரான் வைரஸின் வீரியம் குறைவானது. நோய தொற்று உள்ளவர்களில் 85 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. தடுப்பூசி அளவுகள் அதிகரிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. ஒமைக்ரான் பாதிப்பில் இறப்புகள் மிக குறைவாக இருக்கும், என்றும் அவர் கூறியுள்ளார்.
newstm.in