அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஜோகோவிச் அசத்தல் !!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஜோகோவிச் அசத்தல் !!

Update: 2021-09-11 09:47 GMT

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று  அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில்  ஜோகோவிச் (செர்பியா) - ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர்.  

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கும் ஜோகோவிச்சுக்கு 4-ஆம் நிலை வீரரான ஸ்வரேவ் கடும் சவால் அளித்தார்.  

எனினும், சுதாரித்து விளையாடிய 3 மணி 30 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.  

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற ஜோகோவிச் முனைப்பு காட்டி வருகிறார். ஜோகோவிச் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News