இந்தியாவுக்கு போகாதீங்க.. பெண் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

இந்தியாவுக்கு போகாதீங்க.. பெண் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

Update: 2021-11-18 10:28 GMT

'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என, தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கு டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.

சுற்றுலா தலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. எனவே, அமெரிக்க சுற்றுலா பயணியர், குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News