ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பபெறுகிறது அமெரிக்கா.. புதிய அதிபர் அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பபெறுகிறது அமெரிக்கா.. புதிய அதிபர் அறிவிப்பு !

Update: 2021-04-15 08:37 GMT

அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், 110 மாடிகளை கொண்ட நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் அடுத்தடுத்து விமானங்கள் மோதின. பின்னர் தான் தெரிந்தது அது அல்கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானில் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அப்போது ஆட்சியில் இருந்த தலீபான் அவர்களுக்கு புகலிடம் அளித்தனர். இதன் காரணமாக 2001ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆந் தேதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை அகற்றி மக்களாட்சியை மலர வைத்தது. இதனைத்தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக உள்நாட்டு போரைத் தொடங்கினர்.

எனவே ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு பல்லாயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டனர். அந்த வகையில் அங்கு 2,500 அமெரிக்கப் படை வீரர்கள் உள்ளனர். மேலும் நோட்டோ படையைச் சேர்ந்த 7500 வீரர்களும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். இதனிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் வரும் மே 1ஆம் தேதிக்குள் முழுமையாக திரும்பப்பெறப்படும் என அப்போதைய அதிபர் ட்ரம்ப் உறுதியளித்தார்.

ஆனால் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை மே 1ஆம் தேதிக்குள் திரும்பபெறுவது சாத்தியமற்றது என கூறினார். இதனால், தலீபான்களுடனான அமெரிக்க அரசின் ஒப்பந்தம் முறியும் சூழல் உருவானது.

இந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 20-வது ஆண்டு தினமான வருகிற செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படை வீரர்களையும் திரும்பப்பெற ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜோ பைடன் வெளியிட்டார்.

 இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்ப்பெறுவதற்கான நடைமுறைகளை அமெரிக்கா மே 1ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த வெளியேற்றம் அவசர அவசரமாக நடைபெறாது. பலத்தை குறைக்கும்போது தலீபான்கள் தாக்குதல் நடத்தினால் எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எங்களையும், எங்கள் கூட்டளிகளையும் பாதுகாப்போம் என்று தலீபான்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

செப்டம்பர் 11 தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்படும். ஆனால், பயங்கரவாத அச்சுறுத்தல்களில் நாங்கள் கவனமாக இருப்போம். அப்பகுதியில் உள்ள பிற நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக உதவிகளை செய்ய வேண்டும். குறிப்பாக, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும். நிலையான ஆப்கானிஸ்தானுக்கு இந்த நாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள 2,500 வீரர்களையும் அமெரிக்கா திரும்பப்பெறுவது சர்வதேச அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருத்தப்படுகிறது.

newstm.in

Tags:    

Similar News