உஷார்! தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!!
உஷார்! தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!!
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 6,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 2,000 பேருக்கு சமூக பரவல் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 700 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. அதில் சுமார் 200 பேருக்கு சமூக பரவல் மூலம் நோய் பரவியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் மற்ற 4,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டு அவருடன் தொடர்பில் இருந்ததால் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அந்த ஒருவருக்கு வரவில்லை என்றால் ஒன்பது பேருக்கு வந்திருக்காது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களில் தமிழகத்தில் சிறு சிறு க்ளஸ்டர்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன என்றும், டெல்டாவினால் ஏற்படும் பாதிப்பு இன்னும் போகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்போதும் ஒரு நாளுக்கு 15 பேர் சராசரியாக உயிரிழக்கிறார்கள் என்றும் அதை பூஜ்யம் ஆக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
எனவே கொரோனா பாதிப்பு விலகிவிட்டது என யாரும் நினைக்க வேண்டாம். பொது இடங்களில் முக கவசம் அனைவரும் 100% போடுவதில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இதனால் கொரோனா பரவிக் கொண்டே இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
newstm.in