உஷார்! உல்லாச பாய்ஸ்களால் கதறும் பெண்கள்!!
உஷார்! உல்லாச பாய்ஸ்களால் கதறும் பெண்கள்!!
பெண்களை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு பணம், நகை பறித்துச் சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முருகேசபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகலா (29) என்ற பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. கணவர் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற இளைஞருக்கும் காதலாகி ஏற்பட்டது. முத்து சசிகலாவை திருமணம் செய்வதாக கூறி பலமுறை உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் சசிகலா இரு முறை கர்ப்பமானார். தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
ஆனால் முத்து சசிகலாவை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. சசிகலா புகார் அளித்ததை அடுத்து போலீஸார் முத்துவை அழைத்து பேசினர். அவர் சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டார்.
ஆனால் இன்றுவரை சசிகலாவை முத்து திருமணம் செய்யவில்லை மேலும், சசிகலாவை ஏமாற்றி அவரிடமிருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் திசையன்விளை பகுதியை சேர்ந்த நர்சிங் படித்துள்ள பிரியங்கா என்ற பெண்ணும் அஜித் குமார் என்ற இளைஞரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளைஞர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உறவு வைத்துவிட்டு ஆந்திராவில் உள்ள வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
பிரியங்காவை ஏமாற்றி 5 லட்சம் பணம் மற்றும் நகைகளை அஜித் குமார் ஏமாற்றி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை ஏமாற்றிய அஜித் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியங்காவும் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
newstm.in