உஷார்! உடலை நீலமாக்கும் புதுவகை கொரோனா!

உஷார்! உடலை நீலமாக்கும் புதுவகை கொரோனா!

Update: 2021-04-24 12:32 GMT

இந்தியாவில் கொரோனா 2வது அலை முதல் அலையை விட அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து ஹெல்வேதியா மருத்துவ மையத்தின் மருத்துவர் டாக்டர் சவுரதீப்த சந்திரா விடுத்த செய்திக்குறிப்பில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் புதிய உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை வெவ்வேறு நிலைகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ்களை ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் கண்டறிய முடிவதில்லை. இவை புதிய அறிகுறிகளை தோற்றுவிக்க கூடியவை.முதல் அலையின் அறிகுறிகளாக வறட்சி, உடல் வலி, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை மட்டுமே ஏற்பட்டன.

ஆனால் 2வது அலையில் உருமாறிய வைரஸ் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோலில் புண் ஏற்படுதல், குழப்ப நிலை, கை மற்றும் கால் விரல்களின் நிறங்கள் நீல நிறத்திற்கு மாறுதல், மூக்கு மற்றும் தொண்டை வழியே ரத்தம் வருதல் இவையும் அறிகுறிகளாக தென்படுகின்றன. இதனால் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. நெருக்கடியான இடங்களில் மக்கள் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இந்தியாவில் ஆக்சிஜன், படுக்கை மற்றும் அத்தியாவசிய மருந்துகளும் தட்டுப்பாடுகளும், உயிரிழப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.


மேலும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் , வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை இன்னும் ஒரு சில வாரங்களில் பாதிப்பு உச்சம் அடைந்த பின்னரே குறையத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News