தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு !!

தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு !!

Update: 2021-08-17 13:35 GMT

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில்,  ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கள் முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் அவ்விடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடப்பதால் மூன்றையும் திமுக கைப்பற்றுகிறது. காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் வெவ்வேறு தேதிகளில் முடிவடைவதால் தனிதனியே தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் காலமானதால் அவரது இடத்துக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளது.

  • செப்டம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • வேட்பு மனு துவக்கம்- ஆகஸ்ட் 24
  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் -ஆகஸ்ட் 31
  • வேட்பு மனு பரிசீலனை - செப்டம்பர் 1
  • திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3 
  • தேர்தல் நடைபெறும் நாள்; செப்டம்பர் 13 (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)


newstm.in

Tags:    

Similar News