5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி.. சிறுவர்களை காக்க களத்தில் இறங்கிய அரசு !!
5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி.. சிறுவர்களை காக்க களத்தில் இறங்கிய அரசு !!
5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் அடுத்தடுத்து அலைகளாக பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட மக்கள் போராடி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தடுப்பூசி போடப்பட்டு பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி அடுத்தடுத்து பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் போன்ற நாடுகள் 12 முதல் 17 வயதினருக்குக் கூடுதல் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 15 முதல் 18 வரையிலான வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், 5 வயது முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜப்பானில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை செலுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி தடுப்பூசி பெற தகுதியுடைய 80 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் அல்லது கொரோனா பாதித்தாலும் அதன் தீவிரத்தன்மை கட்டுப்படுத்தப்பட்டு உயிரிழப்பை தடுக்க முடியும் என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
newstm.in