டேட்டிங்க் செயலிகளில் தடுப்பூசி பிரச்சாரம்: நிறுவனங்கள் புதிய யுக்தி..!
டேட்டிங்க் செயலிகளில் தடுப்பூசி பிரச்சாரம்: நிறுவனங்கள் புதிய யுக்தி..!
சமூகவலைதளங்களில் தடுப்பூசி, தடுப்பு மருந்து, எதிர்ப்புசக்திகள் உள்ளிட்ட வார்த்தைகளை குறிப்பிட்டு பதிவிடும் பதிவுகள் அதிகமானோரால் பார்க்கப்படுவதும் விரும்பப்படுவதும் தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் டேட்டிங்க் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்னதாகவும், அதற்கு அடுத்தும் டேட்டிங் செயலிகள் பயன்பாடு மக்களிடம் பரவலாகவே உள்ளது.ஆரம்பத்தில் அழகாக இருப்பவர்கள், வசீகரமான கண்களை கொண்டவர்கள், ஒருமித்த எண்ணவோட்டங்களுடன் இருப்பவர்கள், நகைச்சுவை உணர்வுகள் கொண்டவர்கள் மற்றும் நாகரீகம் தெரிந்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே டேட்டிங் செயலிகளில் மதிப்பு கிடைத்து வந்தது.
ஆனால் தற்போது இந்த நிலை மாறிவிட்டது. பம்பிள், ஓகே கூபிட் உள்ளிட்ட பல்வேறு செயலிகளில் இருக்கும் பயனர்கள் தாங்கள் விரும்பக்கூடியவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதை அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. மேலும் அதை புரிந்துகொண்டுள்ள டேட்டிங் செயலி நிறுவனங்கள், தங்களுடைய செயலிகளின் ஸ்டேட்டஸில் கொரோனா தடுப்பூசி விபரங்களை பதிவிட்டு வருவதை புதிய வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் பயனர்கள் பலரும் தடுப்பூசி, தடுப்பு மருந்து போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிடாமல் இருந்தவர்களை பலரும் விரும்பவில்லை என்கிற விபரமும் தெரியவந்துள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் பயனர்கள் இருவருக்குமிடையே நடக்கும் வீடியோ காலின் போதும் தடுப்பூசி, தடுப்பு மருந்து உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. அதுதவிர, குறிப்பிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் தேதிகளை குறிப்பிட்டு விளம்பரப்படுத்தவும் நிறுவனங்கள் தவறுவதில்லை.
newstm.in