மனசாட்சிக்கு பயந்து தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்..!

மனசாட்சிக்கு பயந்து தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்..!

Update: 2021-12-19 05:45 GMT

தமிழகத்தில் இன்று நடைபெற்ற 15 வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “இன்று ஒரே நாளில் 1,97,009 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 84.26% முதல் தவணையும், 54.73% இரண்டாம் தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 8,04,61,787 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்கள் மனசாட்சிக்கு பயந்து, தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என அமைச்சர் மா‌. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Similar News