தடுப்பூசி போட்டால்தான் ரேஷனில் பொருளா..?: உணவுத்துறை அமைச்சர் விளக்கம்..!

தடுப்பூசி போட்டால்தான் ரேஷனில் பொருளா..?: உணவுத்துறை அமைச்சர் விளக்கம்..!

Update: 2021-12-07 05:35 GMT

தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் பொருட்கள் வழங்கப்படாது எனத் தகவல்கள் பரவின. இது, பொதுமக்களிடையே சற்று சலசலப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்று பரவும் தகவல் உண்மை அல்ல. அது வதந்தி. இது தொடர்பாக தமிழக அரசு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

திருவாரூரில் மட்டும் 39,000 மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் அளவுக்கு நிலையங்கள் உள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அரவைக்கு எடுக்க அரிசி ஆலை உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். டெல்டா பகுதிகளில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Similar News