மருத்துவமனையில் வடிவேலு – வெளியான அறிக்கை!!

மருத்துவமனையில் வடிவேலு – வெளியான அறிக்கை!!

Update: 2021-12-25 19:07 GMT

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து இயக்குநர் சுராஜின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடிக்க தொடங்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியானது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசையமைப்பு வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்த வடிவேலு 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பினார்.

இங்கு வந்ததும் வடிவேலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று உறுதியானதால் அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருடன் சென்னை திரும்பிய இயக்குநர் சுராஜூக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடிவேலுக்கு 'S' gene டிராப் ஆனதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனாவாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உடன் இருக்க யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் வீட்டிலிருந்து அவருக்கு துணையாக யாரும் இல்லை.

அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதே போல் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய இருவரின் மாதிரிகளிலும் மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. பரிசோதனை முடிவுக்கு பிறகே ஒமைக்ரான் பாதிப்பா என்பது தெரியவரும்.

newstm.in

Similar News