சேராத இடம் சேர்ந்து... கதறியழுத நடிகர் வடிவேலு!
சேராத இடம் சேர்ந்து... கதறியழுத நடிகர் வடிவேலு!
தற்போதும் தனக்கு நடிக்க ஆசையும், உடல் வலிமையும் இருக்கிறது, ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை என வைகைப்புயல் வடிவேலு கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் ரசிகர்களை முழுக்க முழுக்க சிரிக்க வைத்தவர் வடிவேலு. இப்போதும் அவர் இல்லாமல் மீம்ஸ்கள் இல்லை. அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதுடன் ஒன்றிப்போனவர். நேரமின்றி ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது படங்கள் இல்லாமல் இருக்கிறார்.
திரையுலகினர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் நண்பேன்டா என்ற வாட்ஸ் ஆப் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வடிவேலு மிகவும் உருக்கமாக பேசினார். மிகவும் உடல் மெலிந்து காணப்பட்ட அவர் கர்ணன் படத்தின் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாடலை பாடி கண் கலங்கினார். சேராத இடம் சேர்ந்து வஞ்சகத்தில் வீழ்ந்தாயடா.. என்ற வரிகளை ஏற்ற இறக்கத்துடன் மிகவும் ரசித்து நிறுத்தி பாடினார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், பலரும் நடிகர் வடிவேலு சினிமா கலைஞராக இருந்த வரையில் பிரச்சனையில்லை. எப்போது அவர் அரசியல் மேடைகளிலும், திமுகவுக்காக வீதி வீதியாக இறங்கி வந்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டாரோ அப்போது சரிய துவங்கியது அவரது மார்க்கெட் என்கிறார்கள்.
நடிகர் விஜயகாந்த்தின் நல்ல உள்ளத்தைப் பற்றி அரசியல் தலைவர்கள் அறிவார்களோ இல்லையோ, ஆனால் திரைத்துறையில் உள்ள அனைவருக்குமே கேப்டனின் வள்ளல் தன்மையும், நல்ல உள்ளமும் தெரியும். நடிகர் வடிவேலு, அவர் மேல் குற்றம் சுமத்தி அவருடன் மல்லுக்கு நின்றார். அதுவும் அவரது இறக்கத்திற்கு காரணம் என்கிறார்கள்.
அப்போது பேசிய அவர் நீங்கள் அனைவரும் ஒரு வருடமாக தான் லாக் டவுனில் இருக்கிறீர்கள், ஆனால் நான் 10 ஆண்டுகளாக லாக் டவுனில் இருக்கிறேன் என வேதனையுடன் தெரிவித்தார்.
இப்போதும் என் உடம்பில் தெம்பும், படத்தில் நடிக்க ஆசையும் இருக்கிறது, ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை என கூறினார். வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவும் கொடூரமானது தெரியுமா என பேசினார்.
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in